பிராகி வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் :


Posted by-Kalki Teamபிராகி வயர்லெஸ் இயர்போன் நிறுவனத்தின் இரண்டு வயர்லெஸ் ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜெர்மன் நாட்டு வயர்லெஸ் இயர்போன் நிறுவனமான பிராகி இந்தியாவில் இரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

தி டேஷ் ப்ரோ மற்றும் தி ஹெட்போன் என இரண்டு சாதனங்களும் பிராகி நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தக தளமான தி ஹெட்போன் சோன் மற்றும் இந்தியவின் முன்னணி ஆன்லைன் வர்த்தகர்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தி டேஷ் ப்ரோ இயர்போன்கள் ஆப்பிள், ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் போன்ற இயங்குதளம் கொண்ட சாதனங்களில் ஒரே கிளிக் மூலம் செட்டப் செய்து கொள்ளும் அம்சம் கொண்டுள்ளது. 4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட தி டேஷ் ப்ரோ ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயர்போன்களில் நவுல்ஸ் (Knowles) பேலன்ஸ் அர்மேச்சர் டிரைவர்கள் வழங்கப்பட்டிருப்பதால் சிறிய சாதனம் என்றாலும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆடியோ கேடெக் மற்றும் இரைச்சல்கள் குறைக்கப்பட்டு, சக்திவாய்ந்த பாஸ் மற்றும் முழுமையாக சீல் செய்யப்பட்டுள்ளது.

தி டேஷ் ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் சென்சார்கள் பயன்படுத்துவோரின் நடக்கும் தூரம், கேடென்ஸ் மற்றும் நீச்சல் செய்யும் தூரம் மற்றும் மூச்சு சார்ந்த தகவல்களை ஒவ்வொரு பயிற்சியை மேற்கொள்ளும் போதும் வழங்கும். இத்துடன் IPX7 சான்று பெற்றிருப்பதால் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பெற்றிருக்கிறது.

புதிய இயர்போன் பிராகி இயங்குதளம் கொண்டிருப்பதால், பயனரின் அசைவுகளை கொண்டு மெனுவை இயக்குகிறது.

அதன்படி இயர்போன் அணிந்து கொண்டு கண்ணத்தில் தட்டுவது, தலையை அசைப்பது உள்ளிட்ட உடல் அசைவுகளை கொண்டு மெனுவை மாற்றும்.

இயர்போன்களுடன் வழங்கப்படும் கேரி கேஸ் தி டேஷ் ப்ரோவை சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது.

தி ஹெட்போன் சாதனம் முழுமையான வயர்லெஸ் வசதியை பெற்றிருப்பதோடு அதிக பயனர்களை கவரும் வகையில் இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தி டேஷ் ப்ரோ போன்றே தி ஹெட்போன் சாதனத்திலும் நாவல்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ப்ளூடூத் 4.0, ஒரு முறை சார்ஜ் செய்தால் ஆறு மணி நேர பேக்கப் மற்றும் வெளிப்புற சத்தத்திற்கு ஏற்ப இசையின் சத்தத்தை இயர்போன்களை ஆஃப் செய்யாமல் மாற்றிக்கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

தி ஹெட்போன் சாதனத்தில் நாவல்ஸ் டிஜிட்டல் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது, ஹெட்போன் இயர்பட்ஸ்களில் வழங்கப்பட்டுள்ள பட்டன்களை கொண்டு இசையை கட்டுப்படுத்தவும், அதன் சத்தத்தை மாற்றவும் முடியும்.

இந்தியாவில் தி டேஷ் ப்ரோ மற்றும் தி ஹெட்போன் முறையே ரூ.27,999 மற்றும் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.Post Comment

Post Comment