குளிருக்கு இதமான - துளசி சூப் :


Posted by-Kalki Teamகுளிர் காலத்தில் உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும் சூப் இது. இன்று இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சுக்குப் பொடி - 2 டீஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

துளசி - சிறிதளவு

புதினா - சிறிதளவு

வெங்காயம் - 1

தக்காளி - 1

சோம்பு - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், புதினா, துளசியை தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிளகை தூளாக்கிக் கொள்ள வேண்டும்.

குக்கரில் வெண்ணெயை போட்டு அது சூடானதும் மிளகுத்தூள், சுக்குப்பொடி, தக்காளி, வெங்காயம், சோம்பு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர் அதனை வடிகட்டி, அதில் புதினா, துளசி சேர்த்து பருகவும்.

சூப்பரான - துளசி சூப் ரெடி.Post Comment

Post Comment