இந்த ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள் இந்தியாவுல இருக்கு தெரியுமா?


Posted by-Kalki Teamநம்மில் பலருக்கு ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதென்றால், மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்ட பல இடங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும். அப்படிபட்ட இடங்கள் எங்கே இருக்கின்றன என்று நாம் கூகுளில் தேடுவோம்.

உலக நாடுகளில் பெரும்பாலான சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் இந்த படங்களின் வழியாக நமக்கு அறிமுகமாகின்றன. ஆனால் நமக்கு நம்ம ஊரில் இருக்கும் அதைவிட சிறந்த இடங்கள் பற்றி தெரியாமலே இருக்கிறது.

ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் நாம் மூக்கின்மேல் விரல் வைத்து புகழும் இந்த இடங்கள் நம்ம ஊரிலேயே இருக்கிறது என்றால் நம்பமாட்டீர்கள் தானே. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படத்தின் வரும் பிரம்மாண்ட மலை உருவம், ஹாரிப்பாட்டர் படத்தில் வரும் குன்று போன்றவை இந்தியாவிலேயே இருக்கின்றன. அவற்றின் நகலைப் போல் இருக்கும் பிரம்மாண்ட இடங்களுக்கு ஒரு பயணம் செல்வோம் வாருங்கள்.

ஊடி ஆலன் கதை, இயக்கத்தில் 2011ம் ஆண்டு வந்த படம் மிட் நைட் இன் பாரிஸ். இந்த படத்தில்

ஓவன் வில்சன், ரேய்ச்சல் மெக்ஆடம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வரும் ஒரு இடம் இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஹீரோ ஹீரோயினுடன் மின்விளக்கு ஒளியில் நடந்து செல்லும் காட்சியின் அனுபவம், நமக்கு கொல்கத்தாவின் தெருக்களில் நடக்கும்போதும் கிடைக்கிறது. ஒருவேளை கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றால், மறக்காமல் இரவு உலா ஒன்று செல்லுங்கள்.

ஊடி ஆலன் கதை, இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான படம் விக்கி கிறிஸ்டினா பார்சிலோனியா. இந்த படத்தில் வரும் ஒரு கடற்கரை காட்சி அப்படியே இந்தியாவில் எடுக்கப்பட்டது போலிருக்கும்.

மும்பை மாநகரத்தின் கடற்கரைச் சாலைதான் அது. இந்த படத்தைப் பார்க்கும்போது நமக்கு மும்பையின் கடற்கரைச் சாலை நினைவுக்கு வரும்.

பீட்டர் ஜாக்சன் இயக்கிய படமான லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் மூன்று பிரிவுகளாக 2001,2,3 ஆண்டுகளில் வெளியானது. இந்த படத்தில் வரும் ஒரு இடம் இந்தியாவில் இருக்கிறது தெரியுமா? முடிஞ்சா கண்டுபிடிங்க பாக்லாம்.

இடுக்கி மாவட்டத்தின் தமிழக எல்லையில் அமைந்துள்ளது மூணாறு. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்தில் வரும் புல்வெளிகள், பசுமைக் காடுகள் அனைத்தும் நமக்கு இந்த இடத்தை நினைவூட்டுகிறது. மூணாறு டிரிப் போகும்போது இதை நினைவு வச்சிக்கோங்க...

இதே படத்தில் வரும் அர்காணத் சிலைகளைப் போல பிரம்மாண்ட உயர பாறைகள் நம்ம ஊரிலும் காணப்படுகிறது. இது நம்மில் பலருக்கும் தெரிந்த இடம்தான் என்றாலும் அந்த நினைவு சட்டென்று வராது.

கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள தூண் பாறைகள் நமக்கு மிகவும் அறிமுகம். இந்த இரு மலைகளும் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது, கொடைக்கானல் போகிறவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களும் தூண் பாறைகளும் ஒன்று.

ஹாரிப்பாட்டர் படத்தில் வரும் ஹாக்வாட்டர் எக்ஸ்பிரஸ் எனும் ரயிலைப் போல இந்தியாவிலும் ரயில் பயணம் இருக்கிறது தெரியுமல்லவா?


Post Comment

Post Comment