ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்!


Posted by-Kalki Teamஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அமைந்துள்ள அகத்தியர் கோயில் எங்கே இருக்கிறது. எப்படி செல்லலாம் என்பதுபற்றிய பதிவு இது.

மாபெரும் ஞானி என்றழைக்கப்படுபவர் அகத்தியர். இவருக்கு தமிழகத்தில் நிறைய கோயில்கள் உள்ளன.

என்றாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஆர்ப்பரிக்கும் அருவிகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த கோயில் மிகவும் வித்தியாசமானதாகவும், காண்போர் கண் வியக்கும் ஒன்றாகும் இருக்கிறது. இந்த கட்டுரையில் தமிழகத்தின் மத்திய நகரமான திருச்சியில் இருந்து இந்த அருவிக்கு எப்படி செல்லலாம் என்று பார்ப்போம்.

குடகு மலையில் அகத்தியர் தவம் செய்தபோது காகம் அவரது கமண்டலத்தைத் தட்டிவிட அது காவிரியாய் ஆனது என்று தொன்னம்பிக்கை உள்ளது. காடுகளில் விரிந்து பரந்து பாய்வதால் காவிரி என்று பெயர் வந்ததாகவும் நம்பப்படுகிறது.

வடக்கே குடகில் ஆர்ப்பரித்து வீழ்ந்து ஓடி காவிரியாய் பாயும் அருவி, தமிழ்நாட்டின் நடுப்பகுதியான திருச்சி வந்தடைகிறது. காவிரியைப்போலவே அகத்தியரால் பாராட்டப்படும் மற்றொரு நீர் ஆதாரமான தென்னகத்தின் காவிரிக்கு திருச்சியிலிருந்து புறப்படுவோம் வாருங்கள்.

நம் பயணம் திருச்சியிலிருந்து மதுரை நோக்கி நகர்கிறது. திருச்சியிலிருந்து மதுரைக்கு இரண்டு வழித்தடங்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

அடிக்கடி பயன்படுத்திவரும் பயணிகளிடமும், வாகன ஓட்டுநர்களிடமும் கேட்டால் விராலிமலை வழியாக செல்லும் பாதையைத் தேர்ந்தெடுப்பதாக கூறுகின்றனர்.

மாற்றுப்பாதையாக மணப்பாறை, திண்டுக்கல் வழியையும் குறிப்பிடுகின்றனர் அவர்கள். முதலில் திருச்சி - விராலிமலை - மதுரை வழியைப் பார்க்கலாம்.

திருச்சியிலிருந்து விராலிமலை வழியாக 135கிமீ தூரம் கொண்ட இந்த பாதையில் எண்ணற்ற சுற்றுலா அம்சங்கள் உள்ளன.

வழித்தடம்

திருச்சி - பஞ்சாப்பூர் - ஆலந்தூர் - காதலூர் - விராலிமலை - கொடும்பலூர் - மருங்காபுரி - துவாரங்குறிச்சி- மேலூர் - மதுரை

திருச்சியிலிருந்து நம் பயணம் தொடங்குகிறது. ஒருவேளை நீங்கள் திருச்சி சுற்றுலா பற்றி அறிய விரும்பினால் இதை சொடுக்குங்கள்.

திருச்சி நகரை தாண்டுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், புறநகர் பகுதிக்கு பின் போக்குவரத்து நன்கு வேகம் கொடுக்க ஆரம்பித்துவிடும். அனுமதிக்கப்பட்ட அளவு வேகத்தில் நம் பயணத்தை விராலிமலை நோக்கி செலுத்துவோம்.

இடையில் விநாயகர் கோயில், கோரை ஆறு, மணிகண்டம் ஏரி, கருப்பசாமி கோயில், மணிகண்டம் மசூதி என பல இடங்கள் இருக்கின்றன. நம் பயணத்தில் கல்குளத்துப்பட்டி எனும் கிராமத்தைத் தாண்டியதும் தாய் உணவகம் ஒன்று வருகிறது. அந்த இடத்தில் ஒரு டோல் கேட் அமைந்துள்ளது. டோல்கேட் தவிர்க்க முயன்றால் ஒரு மூன்றிலிருந்து நான்கு கிமீ சுற்றவேண்டி வரும். விருப்பமுள்ளவர்கள் கிராமத்துக்குள் சென்று சுற்றி அக்கலயக்கன்பட்டி வழி டோல்பிளாசாவை தவிர்க்கலாம்.

சற்று நேரத்தில் விராலி மலை வந்துவிடும். இங்கு காணவேண்டிய இடங்களாக விராலிமலை முருகன் கோயிலும், விராலிமலை மயில்கள் சரணாலயமும் அமைந்துள்ளது.

விராலிமலை பகுதிக்குள் நாம் செல்லும்போதே போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிடும். ஒருவேளை விராலி மலை ஊருக்குள் செல்வதைத் தவிர்க்கவேண்டுமானால், நான்குவழிச்சாலையிலேயே பயணித்துவிடுவது சிறந்தது.

திருச்சி மேலூர் சாலையில் நம் பயணம் தொடர்கிறது. விராலி மலையிலிருந்து நான்குவழிச்சாலையை அடையும் இடத்தில் பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. தேவையெனில் அடைத்துக்கொள்ளலாம்.

இந்த வழியில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

பின்னர் சற்று தொலைவில், புதுக்கோட்டை - மணப்பாறை சாலை குறுக்கிடும். எனினும் மேம்பாலம் இருப்பதால் அச்சமின்றி வேகமாகவே சென்றுவிடலாம். மேம்பாலம் தாண்டியதும் சில கிமீ தொலைவிலேயே உணவகம் ஒன்று அமைந்துள்ளது. கொட்டாம்பட்டி வழியாக மேலூரை அடைகிறோம். மேலூர் அருகே அழகர் கோயில் பாதுகாக்கப்பட்ட காடுகள் அமைந்துள்ளது.

மேலூரிலிருந்து 30கிமீ தொலைவில் மதுரை அமைந்துள்ளது. 45 நிமிடங்களில் அடைந்துவிடமுடியும். பின் அங்கிருந்து நம் பயணத்தை ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தொடங்கலாம். அதே வேளையில் நீங்கள் மணப்பாறை வழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், இப்படித்தான் உங்கள் பயணம் அமைந்திருக்கும்.

இந்த பாதை 168கிமீ தூரம் கொண்டது. முதல் பாதையை விட 33கிமீ அதிக தூரம் உடையது என்றாலும் இயற்கையை ரசித்துக்கொண்டே, கிராமங்கள் வழியாக டோல்கேட் பயமின்றி பயணம் செய்ய ஏதுவானதாக இருக்கிறது.


Post Comment

Post Comment