நடிகையர் திலகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு :


Posted by-Kalki Teamகீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் சாவித்ரியின் வாழ்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுத்து வருகிறார்.

இதில் கீர்த்திசுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினி கணேசனாக, துல்கர் சல்மான் நடிக்கிறார். முக்கிய கதபாத்திரத்தில் நடிகை சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் அலுரிசக்ரபாணி என்ற கதாசிரியர் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பு அடங்கிய வீடியோ ஒன்று சாவித்ரியின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவின் முடிவில் படம் அடுத்த ஆண்டு (2017) மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


Post Comment

Post Comment