குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சை காபி மில்க் ஷேக் :


Posted by-Kalki Teamகுழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சை காபி மில்க் ஷேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பேரீச்சம் பழம் - அரை கப்

உடனடி காபி பவுடர் - 4 தேக்கரண்டி

பால் - 3 கப்

பச்சை ஏலக்காய் - 3

சர்க்கரை - 2 டீஸ்பூன்

புதிய கிரீம் - ¾ கப்

ஐஸ்கியூப்ஸ் - தேவையான அளவு

செய்முறை :

பேரீச்சை பழங்களின் கொட்டைகளை நீக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் காபி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுத்து காபி டிகாஷனுடன் சர்க்கரை மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

சர்க்கரை நன்றாக கரைந்த பின்னர் அடுப்பை அணைத்து நன்றாக ஆற விடவும்.

மிக்ஸியில் கொட்டை நீக்கிய பேரீச்சைகளை போட்டு அதனுடன் சிறிது பால் சேர்த்து நன்கு அரைக்கவும். இதனுடன் ஐஸ் கியூப்ஸ், காபி டிகாஷன், பால் மற்றும் புதிய கிரீம் போன்றவற்றை சேர்த்து மீண்டும் நன்கு கடையவும். மிக்ஸியில் போட்டுள்ள பொருட்கள் நன்கு சேர்ந்து நுரைத்து வரும் வரை கலக்கவும்.

ஒரு உயரமான கண்ணாடி டம்ளாரில் இந்த மில்ஷேக்கை ஊற்றி அதன் மீது சிறிது காபி டிகாஷன் விட்டு மில்க் ஷேக்கை அலங்கரிக்கவும்.

இப்பொழுது உங்களின் பேரீச்சை காபி மில்க் ஷேக் ரெடி.


Post Comment

Post Comment