இந்த வார விசேஷங்கள் :


Posted by-Kalki Team28.11.2017 முதல் 4.12.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

28-ந்தேதி (செவ்வாய்) :

* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருடன் வீதி உலா, இரவு வெள்ளி ரதத்தில் சுவாமியும், வெள்ளி இந்திர விமானத்தில் அம்மனும் பவனி.

* சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* கீழ்நோக்கு நாள்.

29-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.

* சுமார்த்த ஏகாதசி.

* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தேரோட்டம்.

* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.

* மேல்நோக்கு நாள்.

30-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.

* வைஷ்ணவ ஏகாதசி.

* கைசிக ஏகாதசி.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.

* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் வெள்ளி விமானத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் திருவீதி உலா.

* சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.

சமநோக்கு நாள்.

1-ந்தேதி (வெள்ளி) :

* பிரதோஷம்.

* பரணி தீபம்.

* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலையில் கண்ணாடி விமானத்தில் பவனி, இரவு கயிலாச வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் வீதி உலா.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் பட்டாபிஷேகம், தங்கக் குதிரையில் இறைவன் புறப்பாடு.

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (சனி) :

* திருக்கார்த்திகை தீபம்.

* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, ஜோதி ரூபமாய் மகா தீப தரிசனம்.

* குரங்கணி முத்துமாலையம்மன் ஆலயத்தில் நாராயணசுவாமி விசேஷ அலங்காரம்.

* திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (ஞாயிறு) :

* பவுர்ணமி பூஜை.

* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.

* நத்தம் மாரியம்மன் ஆலயத்தில் லட்ச தீபக் காட்சி.

* கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

4-ந்தேதி (திங்கள்) :

* திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் கயிலாச கிரி பிரதட்சணம், பராசக்தி அன்னை தெப்ப உற்சவம்.

* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.


Post Comment

Post Comment