30 லட்சத்தைக் கடந்த தெறி டீசர்


Posted by-Kalki Teamதெறி டீசர் நேற்று வெளியானது முதலே யு டியூபில் டீசரை விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். புலி படத்தால் அவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெறி டீசருக்கு கொடுத்த ஆதரவிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. சில மணி நேரங்களுக்குள்ளேயே 5 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த டீசர் நேற்று காலையே 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது. அதன் பின் சில மணி நேரங்களுக்கு யு டியூபில் தெறி டீசர் முடக்கப்பட்டது. இருந்தாலும் திரும்பவும் வந்த பின் பார்வையாளர்களின் எண்ணிக்கை விறுவிறுவென கூடியது.நேற்று நள்ளிரவு நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த எண்ணிக்கை, அடுத்த பத்து மணி நேரத்திற்குள் 30 லட்சம்

எண்ணிக்கையைத் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது. அது மட்டுமல்ல இதுவரை எந்த ஒரு டீசரும், டிரைலரும் வாங்காத லைக்குகளை வாங்கியும் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இதுவரை வேதா30 லட்சத்தைக் கடந்த தெறி டீசர்

ளம் டீசர்தான் அதிகமான லைக்குகளை வாங்கியதாக இருந்தது. அந்த சாதனையை ஒரே நாளில் தெறி டீசர் முறியடித்துவிட்டது. தற்போது வரை தெறி டீசரின் லைக்குகளின் எண்ணிக்கை 1,75,000ஐத் தாண்டிவிட்டது.அஜித் ரசிகர்கள்தான் இணைய உலகில் புலி அல்ல, நாங்கள் அவர்களை விட தெறி புலி என விஜய் ரசிகர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.


Post Comment

Post Comment