பாலா, ஜோதிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு :


Posted by-Kalki Teamநாச்சியார் திரைப்பட டீசர் விவகாரத்தில் இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு

பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் நாச்சியார். இதில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. இதில் ஜோதிகா கெட்ட வார்த்தையில் ஒரு வசனம் பேசுவார். இதனால், இந்த டீசருக்கு பல சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில், இப்படத்தை இயக்கிய பாலா மற்றும் இதில் நடித்த ஜோதிகாவின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த டீசரில் பெண்மையை இழிவு படுத்தும் கெட்ட வார்த்தை பயன்படுத்தி இருப்பதாக, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 பி மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 67 கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Post Comment

Post Comment