சோனியின் அதிநவீன ஹெட்போன்கள் அறிமுகம் :


Posted by-Kalki Teamசோனி இந்தியா நிறுவனம் அதிநவீன அம்சங்கள் நிறைந்த புதிய ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் சோனி நிறுவனத்தின் நாய்ஸ் கான்செலேஷன் ஹெட்போன்ரகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.14,990 முதல் துவங்குகிறது.

சோனியின் புதிய வயர்லெஸ் ஹெட்போன்களில் மொத்தம் நான்கு மாடல்கள் - WH-1000XM2 ரூ.29,990, WH-H900N ரூ.18,990, WF-1000X ரூ.14,990 மற்றும் WI-1000X ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவற்றில் மூன்று ஹெட்போன்களும் IFA2017 விழாவில் அறிமுகம் செய்யப்படன.

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக சோனியின் WF-1000X சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. பின் அறிமுகமான இரண்டு ஹெட்போன்களின் விற்பனை டிசம்பர் 14-ம் தேதி துவங்குகிறது. அனைத்து வயர்லெஸ் ஹெட்போன்களும் கருப்பு நிறத்திலும், WH-1000MX2 மட்டும் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது.

சோனி WH-1000MX2 மற்றும் WI-1000X ஹெட்போன்களில் அட்மோஸ்ஃபெரிக் பிரெஷர் ஆப்டிமைசிங் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் காற்றின் அழுத்தத்திற்கு ஏற்ப நாய்ஸ் கான்செலேஷன் அம்சத்தை வழங்கும் என சோனி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WH-1000XM2, WF-1000X, மற்றும் WI-1000X ஹெட்போன்களில் சோனியின் இன்டெகிரேடெட் தொழில்நுட்பமான சென்ஸ் இன்ஜின் அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் வழங்குகிறது. இவை தனித்துவம் மிக்க அனுபவத்தை ஒவ்வொரு ஆடியோவிலும் வழங்கும். இசை மற்றும் ஆம்பியன்ட் சவுண்ட் உள்ளிட்டவற்றை தனித்துவமாக அனுபவிக்க முடியும்.

பேட்டரி அம்சத்தை பொருத்த வரை சோனி WH-1000XM2 மாடல் ஆடியோ கேபிள் கொண்டு பயன்படுத்தும் போது 40 மணி நேரங்களும், வயர்லெஸ் மூலம் பயன்படுத்தும் போது 30 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் குவிக் சார்ஜ் அம்சம் பத்து நிமிடம் சார்ஜ் செய்து 70 நிமிடங்களுக்கான பேட்டரியை நிரப்பும் திறன் கொண்டுள்ளது.

சோனி WF-1000X மாடலுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ், ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே வேலை செய்கிறது. சோனி WH-1000XM2 மற்றும் WH-H900N உள்ளிட்ட மாடல்களில் வழங்கப்ட்டுள்ள குவிக் அடென்ஷன் மோட் இசையை கேட்கும் அனுபவத்தை ஸ்மார்ட் முறையில் இயக்க வழி செய்கிறது.

ஹெட்போன்களுடன் ஹெட்போன் கணெக்ட் ஆப் எனும் செயலியை சோனி அறிமுகம் செய்தது. இந்த செயலி பயனர் ஹெட்போன்களை பயன்படுத்தும் சுற்றுச்சூழலை அக்செல்லோமீட்டர் மூலம் கண்டறிந்து பயனரின் அனுபவத்தை மேம்படுத்தும். புதிய சோனி ஹெட்போன்கள் நாட்டில் உள்ள சோனி விற்பனை மையங்கள் மற்றும் இதர மின்சாதன விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.


Post Comment

Post Comment