டுவிட்டரிலும் சாதனை படைத்தார் ஏ.ஆர்.ரகுமான்:


Posted by-Kalki Teamஇசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக செயல்படுகிறவர். நாட்டு நடப்புகளை பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார். தனது இசை அனுபவம், தனது அடுத்த திட்டம், அடுத்த பயணம் பற்றி பற்றி பகிர்வார். இதனாலேயே அவரை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் பின் தொடர்கிறார்கள்.பேஸ்புக்கில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை ஏற்கெனவே ஒரு கோடியை தாண்டி விட்டது. ஒரு கோடி பாலோயர்ஸை கொண்ட முதல் தென்னிந்தியர் என்ற சாதனை படைத்தார்.

தற்போது டுவிட்டரிலும் ஒரு கோடியை தாண்டிவிட்டார். இது அவரது அடுத்து சாதனையாகும். 27 லட்சம் பாலோயர்களுடன் சமீபத்தில் டுவிட்டரில் இணைந்த ரஜினி 2வது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் தனுஷ் இருக்கிறார். நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர் த்ரிஷா.Post Comment

Post Comment