உற்சாகத்தை தரும் மேகதாது- கர்நாடகாவில் அவசியம் காண வேண்டிய இடம்!!


Posted by-Kalki Teamஉங்களுடைய இறுக்கத்தை குறைத்துக்கொள்ள சிறந்த வழியாக சாலை வழியானது அமைய, ஓய்வுடனும் உங்களை நீங்கள் உணரக்கூடும். இந்த நகரத்தின் வெளிப்புறத்தில் நாம் செல்ல, நாட்டுப் புறத்தையும் ரசிப்பதோடு, அதோடு இணைந்த மலையின் சீரான வரிசையையும் ஒட்டுமொத்தமாக ரசிக்கிறோம்.

இவ்வாறு பெங்களூருவானது வளர்ந்து காணப்பட, மக்கள் தொகை அதிகரிப்புடனும், இரைச்சலாகவும் இவ்விடமானது காணப்படுகிறது. இந்த சாலைப்பயணமானது உங்கள் கைகளில் வந்திட, பெங்களூருவிலிருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் பல இடங்களும் சுற்றுலா பயணிகளுக்காக வரிசைக்கட்டி நம்மை வரவேற்கிறது.

மேகதாது அல்லது மேகேதத்து என அழைக்கப்படும் இவ்விடம் சுற்றுலா தளமாக அமைய, கர்நாடகாவின் தாலுக்காவான கனகப்புராவில் அமைந்திருக்க பெங்களூருவிலிருந்து (பெங்களூர்) 194 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. இங்கே காவேரி நதியானது குறுகிய அழகுடன் அருவிகளும் காணப்படுகிறது.

கன்னட மொழியில், மேகதாது என்பதற்கு அர்த்தமாக ஆடுகளின் துணிகரம் என பொருள்தர, அர்த்தமாக ஆடானது அடுத்த கரைக்கு எளிதாக தாவக்கூடும் என சொல்லப்படுகிறது. இந்த சுற்றுலா தளத்திற்கு வருடந்தோரும் பலரும் வந்து செல்கின்றனர்.

செல்லும் வழி:

வழி 1: பெங்களூருவிலிருந்து மேகதாதுவிற்கான சாலை பயணமாக கனகப்புரா சாலையானது வழிகளின் வரைப்படமாக காணப்படுகிறது.

பெங்களூரு - கனகப்புரா - மேகாதாதுவானது எளிதான வழியாகவும் பலரும் வழக்கமாக பயன்படுத்தும் வழியாக அமைகிறது. நீங்கள் இவ்வழியாக கனகப்புரா பிரதான சாலை வழியாகவும், அதன்பின்னர் நம் பயணமானது தேசிய நெடுஞ்சாலை 948 வழியாகவும் தொடரும். இந்த வழியானது கக்களிப்புரா - ஜக்காசான்ட்ரா - கனகப்புரா - மாலவள்ளி - சர்கூர் - மேகதாதுவாக அமைகிறது. கனகப்புரா சாலையானது இந்த நாளில் கூட்டமாக காணப்பட, அதனால் கூட்ட நெரிசலை நாம் எதிர்க்கொள்ள தயாராகவும் இருக்க வேண்டும். அத்துடன் ஒட்டுமொத்த தூரமாக 194 கிலோமீட்டரும் காணப்படுகிறது.

வழி 2: வழி வரைப்படமாக பெங்களூருவிலிருந்து மேகதாது சாலை வழிப்பயணம் அமைய, வழியாக மைசூருவும் காணப்படுகிறது.

மற்ற பிற வழிகளாக பெங்களூரு - பிடாடி - ராமநகரா - மத்தூரு - மாலவள்ளி - சிவானசமுத்ரம் - மேகதாதுவானது காணப்படுகிறது. இந்த வழியானது தேசிய நெடுஞ்சாலை 275 மற்றும் அதன்பின்னர் தேசிய நெடுஞ்சாலை 948 வழியாகவும் இணைய, மாலவள்ளி நோக்கியும் செல்லக்கூடும்.

மேகதாதுவை நாம் காண சிறந்த நேரங்கள்:

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் மேகதாதுவை காண சிறந்த காலமாக அமைகிறது. பருவமழைக்காலத்தில், பாறைகளானது சருகலாக காணப்பட இந்த நேரத்தில் காண வரவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில், நதியானது வடிந்து காணப்பட, குளிர்காலமானது இந்த இலக்கை நாம் எட்ட சரியான தேர்வாக அமையக்கூடும்.

போக்குவரத்துப் பற்றி:

கனகப்புரா வரை தான் பேருந்துகள் காணப்படுகிறது. நீங்கள் அதனால் தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்ய அங்கிருந்து மேகதாதுவை நாம் அடைகிறோம். அதனால், உங்கள் சொந்த வாகனத்திலோ அல்லது வாடகைக்கு எடுத்துக்கொண்டு செல்வது நல்லதாகும்.

மேகதாதுவிற்கு செல்லும் வழியில் காணப்படும் உணவகங்கள்:

கனகப்புரா சாலை விட்டு வெளியேறும் முன்னே காலை உணவை நாம் முடித்துக்கொள்வது நல்லதாகும். அங்கே பெரும் உணவகங்களான அடையார் ஆனந்த பவன் மற்றும் வாசுதேவ் அடிகஸ் ஆனது கோனங்குட்டே அருகாமையில் கடந்து காணப்படுகிறது. அதன்பின்னர் நம்மால் செல்லும் சாலையில் உணவகங்களை காண முடியவில்லை. நம்மால் ஒரு சில நாகரிகமான உணவகத்தையும் கனகப்புராவில் பார்க்க முடிகிறது. ஒருவேளை நீங்கள் ராம நகரா வழியாக சென்றால், ராஷ்டா கஃபே அல்லது காமத் லோகாருச்சியில் நிறுத்திடலாம்.

மேகதாதுவின் அருகாமையில் காணப்படும்

இடங்கள்:

சிவானசமுத்ர வீழ்ச்சி மற்றும் சங்கமா ஆகிய இரண்டும் மேகதாதுவின் அருகாமையில் ஈர்ப்புடன் காணப்படும் தலை சிறந்த சுற்றுலா தளமாகும். இதனை கடந்து, நம்மால் கல்லஹல்லி ஸ்ரீ ஸ்ரீநிவாசா ஆலயத்தையும் கனகப்புராவில் காணலாம்.

பெங்களூருவிலிருந்து காணப்படும் மேகதாது விடுமுறைக்கு ஏற்ற சிறந்த வாரவிடுமுறை இடமாக அமைகிறது. இந்த அமைதியான இடமானது, நகரத்தின் நெரிசல் தவிர்த்து நம்மால் சிறப்புடன் குதூகலிக்க ஒரு நாள் பயணமாக அமையக்கூடும். அதனால், இந்த வாரவிடுமுறையை பெங்களூருவிலிருந்து மேகதாதுவை நோக்கி சென்று நினைவினை மனதில் தேக்கிக்கொண்டு மனமகிழலாம்.


Post Comment

Post Comment