வயிற்று கோளாறை குணமாக்கும் வரமல்லி சட்னி :


Posted by-Kalki Teamவயிற்று கோளாறு, சளி, இருமல், வாய் கசப்பு, காய்ச்சால் அவதிப்படுபவர்கள் இந்த வரமல்லி (தனியா அல்லது முழு கொத்தமல்லி) சட்னியை செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள் :

தேங்காய் துருவல் - கால் கப்

முழு கொத்தமல்லி (தனியா) - 3 மேஜைக்கரண்டி

உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி

மிளகாய் வத்தல் - 3

புளி - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முழு கொத்தமல்லி, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்வை தனித்தனியாக போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.

பிறகு அதனுடன் மிளகாய் வத்தல், புளி, தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களோடு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும்.

சுவையான வரமல்லி சட்னி ரெடி. இட்லி.

தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.Post Comment

Post Comment