மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு - பன்னீர் லாலிபாப் :


Posted by-Kalki Teamஉருளைக்கிழங்கு - பன்னீர் லாலிபாப்பை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 250 கிராம்

பிரட் - 6

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சாட் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

பன்னீர் - கால் கப்

பச்சை மிளகாய் - 3

சோள மாவு - 2 டீஸ்பூன்

சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

பிரட்டை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்துக் மசித்து கொள்ளவும்.

பன்னீரை துருவிக்கொள்ளவும்.

இஞ்சி தோலை உரித்து விட்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு மைய இடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய பன்னீர், இடித்து வைத்த இஞ்சி மசாலா, சீரகப் பொடி, சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

நன்கு பிசைந்து வைத்த உருளைக்கிழங்கு கலவையில் ஊற வைத்த பிரட்டை தண்ணீர் பிழிந்து விட்டு சேர்த்து சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு உருளைக்கிழங்கு மாவை பந்து போல் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக தேய்த்து பிடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஓரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருண்டையாக பிடித்து வைத்த உருளைக்கிழங்கு உருண்டையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பொரித்த உருளைக்கிழங்கில் லாலிபாப் ஸ்டிக்கை சொருகி வைத்து பரிமாறவும்.

சுவையான உருளைக்கிழங்கு - பன்னீர் லாலிபாப் ரெடி!Post Comment

Post Comment