திருமண தடை, குழந்தை பாக்கியம் அருளும் கலிவரதராஜ பெருமாள் :


Posted by-Kalki Teamகலிவரதராஜ பெருமாள் ஆலயம் கல்வி, செல்வம், திருமணம், குழந்தைப் பேறுகளுக்கும், பிணி தீர்த்தலுக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

சுழலும் கல் தாமரை மொட்டு உள்ள கோவில், கலியுக கவலை நீக்கும் கடவுள் வாழும் திருக்கோவில், திருமணப் பேறு, குழந்தைப்பேறு வரமருளும் தலம், ஒரே வளாகத்தில் சைவ, வைணவ ஆலயங்கள் கொண்ட திருக்கோவில், நான்கு மகான்களின் மடங்களும் ஜீவ சமாதிகளும் அமைந்த புண்ணிய பூமி என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது, கலிவரதராஜ பெருமாள் கோவில்.

இந்த ஆலயம் கல்வி, செல்வம், திருமணம், குழந்தைப் பேறுகளுக்கும், பிணி தீர்த்தலுக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. அத்துடன் கலியுகத்துக் கவலைகளை நீக்கும் தெய்வமாகவும் இவர் விளங்குகின்றார்.

தை வெள்ளியில் தாயாருக்கு மாலை சாற்றி வழிபட்டு வந்தால் ஓராண்டிற்குள் திருமணம் கைகூடும் என்பதும், தல மரத்தை மனமுருகி வேண்டி பன்னிரண்டு முறை சுற்றினால் திருமணப்பேறு மற்றும் மகப்பேறு கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திற்குக் கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு மேற்கே 20 கிலோமீட்டர் தூரத்திலும் வளவனூர் அமைந்துள்ளது. வளவனூர் சத்திரம் அல்லது பஜார் நிறுத்தத்தில் இறங்கி, வடக்கே ஒரு பர்லாங்கு தூரம் சென்றால் கலிவரதராஜப் பெருமாள் கோவிலை அடையலாம்.


Post Comment

Post Comment