மெர்சல் படத்தை விஜய்யுடன் பார்த்த கமல்ஹாசன் :


Posted by-Kalki Teamவிஜய் நடிப்பில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் `மெர்சல் படத்தை நடிகர் கமல்ஹாசன் விஜய், அட்லி உள்ளிட்ட படக்குழுவுடன் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளிக்கு வெளியாகி பல்வேறு சர்ச்சைக்குள்ளான மெர்சல் படத்தை நடிகர் கமல்ஹாசன் விஜய், அட்லி உள்ளிட்ட `மெர்சல் படக்குழுவுடன் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் மற்றும் காட்சிகள் இந்தியா முழுவதும் டிரெண்டாகி அனைவராலும் பேசப்படும் ஒன்றாக அமைந்தது.

படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இது இந்திய அளவிலும் எதிரொலித்தது. அப்போது மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறும் போது, `மெர்சல் படத்துக்கு தணிக்கை சான்று பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்யக் கூடாது. விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். விமர்சிப்போரை மவுனமாக்கக் கூடாது. கருத்துக்களை தெரிவிக்கும்போது தான் இந்தியா ஒளிரும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், `மெர்சல் படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து அவருடன் படத்தை பார்த்துள்ளனர்.


Post Comment

Post Comment