பல்லவர்களும் பாண்டியர்களும் மோதிக்கொண்ட முதலாம் உலகப்போர் நடந்த இடங்கள் !


Posted by-Kalki Team1914ம் ஆண்டு நேசநாடுகளுக்கும், மைய நாடுகளுக்கும் இடையே உலகம் முழுவதும் நடைபெற்ற உலகப் போர் இல்லை இது.. அதற்கு பல வருடங்கள் முன்பாகவே, கிபி870 களில் உலகின் முக்கால்வாசி பகுதிகளை ஆண்ட தமிழ் மன்னர்களிடையே நடைபெற்ற மிகப்பிரம்மாண்ட போர்.

திருப்புறம்பியம் போர் பற்றியும், போர் நடைபெற்ற இடங்களின் தற்போதைய நிலைபற்றியும் இந்த பதிவில் காண்போம்.

உலகமுழுவதும் நடைபெற்ற போர்கள்தான் உலகப்போர் என்று அழைக்கப்படுகிறது. உலகத்துக்கே தெரியாமல், ஏன் தமிழர்களில் இன்னும் பலருக்கு தெரியாமல் தமிழ் மன்னர்களிடையே நடைபெற்ற பிரம்மாண்ட போரா உலகப்போர் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

பல்லவ சாம்ராஜ்யத்தின் அழிவு என்பது இந்த போரில்தான் முற்றுபெற்றது. அதற்குபின் பல்லவ மன்னர் என்று யாரும் வரலாற்றில் இல்லை என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

திருப்புறம்பயம் போர் கிபி 800 களில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தியிருந்தனர்.

முத்தரைய குறுநில மன்னர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் கட்சிகளைப் போல முத்தரையர்களும் பல்லவர்களுடனும் பாண்டியர்களுடனும் மாறி மாறி சேர்ந்துகொண்டனர் என்பது கல்வெட்டுகள் மூலமாக தெரியவருகிறது. தங்கள் நாட்டுக்கு எது நல்லது என்று மக்களுடன் கலந்து முடிவெடுப்பார்கள் என்றும் தெரிகிறது.

பாண்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், முத்தரையர்கள் தஞ்சையை இழந்தனர். பல்லவர்களின் விசுவாசவர்களாக இருந்த சோழர்களுக்கு தஞ்சை கிடைத்தது.

இதன்பின்னர் நடந்த நிகழ்வுகளில்தான் சோழர்கள் எதிர்பார்த்திராத அளவு பிரம்மாண்டமாக முன்னேறினர். விஜயாலசோழன் இந்திய வரலாற்றின் மிக முக்கிய மன்னரானார்.

முத்தரையர்களுக்கு ஆதரவாக பாண்டியர்கள் விஜயாலனுக்கு எதிராக போரிட சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்றனர்.

பாண்டியர்கள் சோழநாட்டின் வடகரையிலுள்ள இடவை (காவிரிக்கு வடகரையிலுள்ள பகுதிகள்)


Post Comment

Post Comment