பெங்களூர் பக்கத்துல இருக்கிற மாலூர்ல சுத்திப் பாக்க என்ன இருக்கு? இதப் படிங்க!!


Posted by-Kalki Teamஇந்தியாவின் மிகவும் விருப்பத்தகும் நகரங்களுள் ஒன்றாக பெங்களூரு காணப்படுகிறது. இந்த நகரம், ஆர்வத்தை தரக்கூடிய கடந்த காலத்தில் வளர்ந்த ஒரு நகரமும் கூட. இதனை இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என அழைக்க, இங்கே எண்ணற்ற மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அலுவலகமானது பெரு நிறுவன கட்டுப்பாட்டிற்குள்ளும் காணப்படுவதோடு அசூர வளர்ச்சியையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ஐ.டி மையமாக பெங்களூருவை இலக்கிய ரீதியாக கருதப்படுகிறது.

முன்னால், இந்தியாவின் தோட்டத்து நகரமெனவும் நாம் அழைக்க, ஒவ்வொரு வழிகளும் எண்ணற்ற மரங்களால் ஆசிர்வதிக்கப்பட்டும் காணப்படுகிறது. பெங்களூருவானது பழைய மற்றும் புதிய கலாச்சாரத்தின் பெருமையை தாங்கிக்கொண்டு நிற்கிறது. இன்றும் இதன் சுய கலாச்சாரத்தை பராமரித்திட; புதிய கலாச்சாரத்திற்கு ஏற்ற மால்களையும், காபி ஷாப்பையும், உலகமயமான ஹோட்டல்களையும் மற்றும் பப்களையும் கொண்டிருக்கிறது.

பெங்களூருவின் சிறந்த கால நிலையானது வருடமுழுவதும் காணப்படுகிறது. மற்ற நாடுகள் யாவும் ஹியர் ஸோ ஹாட்யா என வெதுவெதுப்புடன் வேதனையை பகிர்ந்துக்கொள்ள அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் பெங்களூரு வாசிகள், மழையில் ஓர் அழகிய பதிவு என இன்ஸ்டாகிராமிலும், முகப்புத்தகத்திலும் போட்டு அனைவரது முகத்தையும் சிவக்க செய்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட மொழியாக கன்னடா பேசப்பட, பெங்களூரு அனைவருக்கும் ஒத்துப்போக, பெரும்பாலும் இந்தி மற்றும் ஆங்கிலமும் பேசுகின்றனர்.

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் காணப்படும் நகரம் தான் மாலூர். பெங்களூரு நகரத்திலிருந்து 48 கிலோமீட்டர் வெளியில் காணப்படுகிறது. மேலும் இவ்விடமானது பெங்களூருவிலிருந்து விடுமுறை கொண்டாட்டமாக வெளியேற சிறந்த இடமாகவும் அமைகிறது.

முன்பு, இதனை மல்லிகாபுரா என்று அழைக்க, இங்கே நம்மால் எண்ணற்ற மல்லிகையையும் பார்க்க முடிய, அவை தொடர்ந்தும் காணப்படுகிறது. மாலூரின் எல்லையாக தமிழ்நாட்டின் ஒசூரும், ஆந்திர பிரதேசத்தின் குப்பமும் அமைந்திருக்க, அதனால், கன்னடாவுடன் சேர்த்து தமிழ் மற்றும் தெலுங்குவும் பேசப்படுகிறது.

மாலூரில் முக்கியமாக விவசாயமானது காணப்படுகிறது. மேலும், இவ்விடம் ஓடு மற்றும் செங்கல் தொழிற்சாலைக்கும் பெயர்பெற்று விளங்குகிறது. இந்த ஓடுகளும், செங்கற்களும் சென்னை மற்றும் பெங்களூருவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கே மாலூரில் பல நிறுவப்பட்ட, பெயர்பெற்ற தொழிற்சாலைகளான ஹோன்டா மோட்டார் சைக்கிள் லிமிடெட், மஹிந்திரா விண்வெளி, மெடினோவா என பலவும் காணப்படுகிறது. அதனால், மாலூரின் அருகாமையில் பரந்த வேலைவாய்ப்புகளும் காணப்படக்கூடும்.

மாலூரை நாம் காண சிறந்த நேரங்கள்:

பெங்களூருவிற்கு அருகாமையிலிருக்கும் மாலூர், சிறந்த கால நிலையை கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தில் வெப்ப நிலையானது 35 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும். குளிர்காலமும், பருவமழைக்காலமும் சிறந்த நிலையில் இருக்கிறது. மாலூரை நாம் வருடந்தோரும் பார்ப்பதற்கு ஏதுவாகவும் அமைகிறது.

மாலூரை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவின் கெம்பி கௌடா சர்வதேச விமான நிலையம் தான் மாலூருக்கு அருகாமையில் காணப்படுமோர் விமான நிலையமாகும். மாலூரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமான நிலையம் காணப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவிலிருந்து மாலூருக்கு 19 இரயில்கள் இயக்கப்பட, அவற்றுள் இரண்டு அதிவேக இரயில்களாகும். பெங்களூருவிலிருந்து மாலூரை நாம் அடைய சராசரியாக 1 மணி நேரங்களும் சில நிமிடங்களும் ஆக, கால அவகாசம் என்பது இரயிலின் வேகத்தை பொறுத்தே அமையக்கூடும்.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

பெங்களூருவிலிருந்து சாலை வழியாக மாலூரை அடைய மூன்று வழிகள் காணப்படுகிறது.

வழி 1: பெங்களூரு - கிருஷ்ணராஜப்புரா - ஹோஷ்கோட்டே - மாலூர்; வழி தேசிய நெடுஞ்சாலை 75 மற்றும் மாலூர் பைரனஹல்லி சாலை. இந்த 45 கிலோமீட்டரை நாம் கடக்க, சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகிறது.

வழி 2: பெங்களூரு - மாரத்தஹல்லி - வொய்ட் பீல்ட் - மதனஹல்லி - மாலூர்; வழி HAL பழைய விமான நிலைய சாலை. இந்த 47 கிலோமீட்டரை நாம் கடக்க, 2 மணி நேரங்கள் தேவைப்படுகிறது.

வழி 3: பெங்களூரு - கார்மேலரம் - சிக்கா திருப்பதி - மாலூர்; வழி பெங்களூரு - மாலூரு சாலை. இந்த 53 கிலோமீட்டரை நாம் கடக்க, 2 மணி நேரங்கள் ஆகிறது. முதலாம் வழியானது இரண்டு மற்றும் மூன்றாம் வழியை காட்டிலும் குறைவான தூரமாக இருக்கிறது. இவ்வழியானது சிறந்த சாலையை கொண்டிருக்க, முதலாம் வழியானது பயணத்திற்கு பரிந்துரை செய்யவும்படுகிறது.

தர்சினியில் ஓர் மனமாற காலை உணவை உண்ணலாம்:

நீங்கள் பெங்களூரு தரிசனத்தை நகரத்தின் தர்சினி உள்ளூர் உணவகத்தில் சாப்பிட்டு வயிறு நிரம்ப, முகத்தில் காணும் சிரிப்பால் அகம் குளிர்ந்தது என்பதையும் நீங்கள் உணர்வீர்கள். இங்கே பெங்களூருவின் மிகச்சிறந்த காலை உணவான மசாலா தோசை, கேசரி பாத், காரா பாத், இட்லி அல்லது வடையுமென, சாப்பிட்டு கைகளை நீங்கள் கழுவ, சூடான பில்டர் காபியும் நாவை இதமாக மாற்றக்கூடும்.

இந்தியாவிலே பெங்களூருவில் தான் மிக சிறந்த பில்டர் காபியானது கிடைக்கிறது. நீங்கள் MG.சாலையிலும், வணிக தெருவழியாகவும் உங்கள் பயணத்தை தொடங்க, அற்புதமூட்டும் தெரு ஷாப்பிங்க் அனுபவத்தையும் பெறுவீர்கள். மாலூருக்கு செல்லும் வழியாக இது அமைகிறது. வணிக தெருவில் குறிப்பாக, விதவிதமான வெள்ளி நகைகளும், இந்திய இனத்துணிகளும் காணப்படுகிறது.

செல்லும் வழியில் காணப்படும் ஆலயங்கள்:

பெங்களூரு முதல் KR புரம் என அழைக்கப்படும் கிருஷ்ணராஜபுரம் வரை, இந்த 13 கிலோமீட்டரை நாம் அடைய ஒரு மணி நேரங்கள் தேவைப்படுகிறது. அதன்பின்னர் அடுத்ததாக 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹோசகோட்டேவை நாம் அடைகிறோம். இந்த ஹோசகோட்டே கோட்டை பகுதியில் காணப்படும் சில ஆலயங்களாக அவிமுக்தேஷ்வர ஆலயம், வரதராஜ ஆலயம், மற்றும் விதோபா ஆலயங்களும் அமைகிறது. ஹோசகோட்டேவின் கோட்டே ஆஞ்சநேய சுவாமி ஆலயம், ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்பட, 800 வருடங்களுக்கு பழமை வாய்ந்ததாகவும் காணப்படுகிறது.

ஹோசகோட்டேவிலிருந்து மாலூரை நாம் அடைய 41 நிமிடங்கள் ஆகிறது. இந்த இரு இடங்களும் 20 கிலோமீட்டர் தொலைவிலே காணப்படுகிறது.

விருதை வென்ற எழுத்தாளரான மஸ்தி வெங்கடேஷ ஐயங்கார் கிராமமான மாலூரின் மஸ்தி கிராமத்தில் நம் பயணமானது நிறுத்தப்படுகிறது.

மாலூரின் உள் மற்றும் சுற்றி காணப்படும் ஈர்ப்புகள்:

மாலூர் தாலுக்காவில் காணப்படும் ஓர் கிராமம் தான் கொடிஹல்லி எனப்பட, ஏராளமான ரோஜா வகைகளும் காணப்படும். மாலூரின் ஹுலிமங்கலா கிராமமானது சிகப்பு மிளகாய்க்கும் அதே சமயத்தில் ரோஜாக்களுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. ரோஜாக்களும், சிகப்பு மிளகாய்களும் கர்நாடகாவின் பல பகுதிகளுக்கும், அருகிலுள்ள மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சிக்கா திருப்பதி ஆலயம்:

மாலூரின் பிரசித்திப்பெற்ற ஆலயமாக சிக்கா திருப்பதி காணப்பட, வெங்கடேஷ்வராவுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது. இந்த கட்டிடக்கலையானது திருப்பதி வெங்கடேஷ்வர ஆலயத்தை ஒத்து காணப்படுகிறது. இந்த ஆலயமானது பல நூற்றாண்டுகளுக்கு பழமை வாய்ந்த ஒன்று எனவும் தெரியவருகிறது. இந்த ஆலயத்தின் சுவாரஸ்யமாக கடவுள் தனது கரத்தை மேலே உயர்த்திருக்க, திருப்பதியில் கீழே அவரது கைகளும் காணப்படும்.

பாலாம்பிகா ஆலயம்:

மாலூரின் மற்றுமோர் முக்கியமான, பிரசித்திப்பெற்ற ஆலயம் தான் பாலாம்பிகா ஆலயமாகும். இந்த ஆலயத்தின் முன்னணி தெய்வமாக பார்வதி தேவி எனப்படும் ராஜ ராஜேஷ்வரி காணப்படக்கூடும். இந்த ஆலயமானது 2011 ஆம் ஆண்டு கட்டப்பட, திராவிடக்கட்டிடக்கலை பாணியிலும் காணப்படுகிறது. இந்த அமைப்பு மற்றும் கட்டிடக்கலையானது தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரின் கங்கைக் கொண்ட சோழப்புரத்தால் ஈர்க்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது

கோலரம்மா ஆலயம்:

மாலூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கோலரம்மா ஆலயம், பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது. இந்த L வடிவ ஆலயமானது திராவிட விமான கட்டிடக்கலை பாணியில் காணப்படுகிறது.


Post Comment

Post Comment