வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் வேப்பம் பூ சூப் :


Posted by-Kalki Teamபெரியோர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் உகந்தது இந்த வேப்பம் பூ. இந்த சூப்பை குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழியும். இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேப்பம் பூ - 2 டீஸ்பூன்,

வெண்ணெய் - 2 டீஸ்பூன்,

காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்,

உப்பு , மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை :

வேப்பம் பூவை சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு உருக்கியதும் வேப்பம் பூ சேர்த்து வறுக்கவும்.

அடுத்து அதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு இறக்கி வடிகட்டவும்.

இதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பருகலாம்.

துளி கூட கசப்பே தெரியாது. வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். மாதம் ஒரு முறை சாப்பிட்டால் கூட போதுமானது.


Post Comment

Post Comment