மகளிர் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தனி கவனம் செலுத்த வேண்டும் - மிதாலி ராஜ் பேட்டி :

Posted by-Kalki Team

மகளிர் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்வதன் மூலம் மக்களிடையே அது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தலாம் என மிதாலி ராஜ் கூறினார்.

ந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அளித்த பேட்டி வருமாறு:-

மகளிர் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சியில் போட்டிகளை அடிக்கடி ஒளிப்பரப்பு செய்வதன் மூலம் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். மக்கள் நேரடி ஒளிபரப்பை பார்த்ததை விட அதிக மக்கள் அதன் மறு ஒளிப்பரப்பை பார்த்துள்ளனர்.

நாங்கள் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கிறோம். அது டி20 மற்றும் ஒருநாள் போட்டியாக இருந்தாலும் சரி. உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு எங்கள் அணி தயாராக உள்ளது. அது குறித்து ஐசிசி சற்று ஆலோசனை செய்ய வேண்டும்.

போட்டிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளம்பரத்தை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் மைதானத்திற்கு நேரில் வந்து விளையாட்டை பார்க்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை.


Follow us at: