விக்ரம் மகனை இயக்குகிறார் பாலா :


Posted by-Kalki Teamசினிமாவில் 10 ஆண்டுக்கும் மேலாக சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டும், டப்பிங் பேசிக்கொண்டும் இருந்த விக்ரமை சேது என்ற ஒரே படத்தின் மூலம் உச்ச நட்சத்திரமாக்கியவர் பாலா. பிதாமகன் படத்தின் மூலம் தேசிய விருதையும் விக்ரமிற்கு வாங்கிக் கொடுத்தார் பாலா. அதேபாலா இப்போது விக்ரமின் மகன் துருவையும் இயக்க இருக்கிறார். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் ஆகிறது. விஜய் தேவகரகொண்டா நடித்த கேரக்டரில் துருவ் நடிக்கிறார்.விக்ரம் தன் மகனை பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், மணிரத்னம், ஷங்கர் படத்தின் மூலம் அறிமுகப்படுத்த நினைத்திருந்தார். ஆனால் துருவிற்கு அர்ஜுன் ரெட்டி பிடித்திருந்ததால் ரீமேக் படத்தின் மூலம் அறிமுகப்படுத்த முடிவு செய்தார். தெலுங்கில் இயக்கிய சந்தீப் ரெட்டியே தமிழ் படத்தையும் இயக்கலாம் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் சந்தீப் ரெட்டி வேறொரு படம் இயக்கும் பணியில் இருப்பதால் அர்ஜுன் ரெட்டியை இயக்க நல்ல இயக்குனர் தேடினார் விக்ரம். பாலா ரீமேக் படத்தை இயக்குவாரா என்ற தயக்கம் இருந்ததால் விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணிதரன், நலன் குமாரசாமி மாதிரியான இளம் இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. விஷயத்தை கேள்விப்பட்ட பாலா, தானே இயக்கித் தர ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதனால் விக்ரம் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது பாலா இயக்கி உள்ள நாச்சியார் பட வேலைகள் முடித்த பிறகு இந்தப் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. அர்ஜுன் ரெட்டி என்பது ஹீரோவின் பெயர் என்பதால் தமிழுக்கும் நல்ல பெயரை தேடிக் கொண்டிருக்கிறார் விக்ரம்.


Post Comment

Post Comment