தீரா கடன் தொல்லையா? கவலையை விடுங்க! இந்த இடத்துக்கு போங்க!!


Posted by-Kalki Teamபொதுவாகவே செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ நாள் ருணவிமோசன பிரதோஷமாக நம்பப்பட்டு கொண்டாடப்படுகிறது.

கடன் பெற்றவர் ஏதோ ஒரு தேவைக்காக தன் சுமையை குறைப்பதாக நினைத்துக்கொண்டு கடன் தொல்லையில் சிக்கிக்கொள்கிறார். அதிக கடன் வாங்குபவரின் கழுத்து நெருக்க நெருக்க அவரால் வாழ்வில் பிடித்தம் இல்லாமல் தற்கொலைக்கு கூட சென்றுவிடும் நிலைமையில் உள்ளது கடன் பிரச்னை. தன் மனைவிக்கு தெரியாமல் கணவனும், கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மாறி மாறி கடன் வாங்கி அடைக்கமுடியாமல் திண்டாடும் வீடுகளும் இங்கு நிறைய காணமுடிகிறது. இதற்கெல்லாம் தீர்வு ஒன்றுதான் என்று இறுதியில் தெய்வத்திடமே சரணடைந்து விடுகிறோம்.

இன்றையதினம் நல்ல நேரத்தில் குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்றால் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம் சேர்க்கும். உங்களுக்கும் வாழ்வில் கடன் தொல்லையா கவலையை விட்டுட்டு இந்த கோயில்களுக்கு போங்க!

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம்.

நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் ப்ரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள். சரி நீங்கள் இன்றைய தினம் செல்லவேண்டிய கோயில்களைப் பற்றி காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் துன்பம் நீங்கி வாழ்வில் கடன்சுமையின்றி வசந்தம் வீசும்.

திருநெல்வேலி திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.

காந்திமதியம்மனுக்கு இன்று மாலை சிறப்பு வழிபாடும் நடத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பு. தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இதுவாகும்.

திருவொற்றியூர் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

மயிலாடுதுறை மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது.

இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது வசந்தமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

சிதம்பரம் மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் துன்பம் நீங்கி வாழ்வில் கடன்சுமையின்றி வசந்தம் வீசும்.

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு 12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.

திருவண்ணாமலை எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்.


Post Comment

Post Comment