#இறுதிச் #சுற்று #படத்தைப் #பார்க்க #மைக் #டைசன் #விருப்பம் :


Posted by-Kalki Teamமெயில் முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனும், அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரருமான மைக் டைசன், மாதவன் நடித்து சமீபத்தில் வெளியான இறுதிச் சுற்று படத்தைக் காண ஆவலாக உள்ளது என்று விருப்பம் தெரிவித்துள்ளார். மாதவன் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறுதிச் சுற்று. இதில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராக நடித்துள்ளார் மாதவன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஹிந்தியில் சாலா காதூஸ் (Saala Khadoos) என்கிற பெயரிலும் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், இறுதிச் சுற்று படத்தின் விமரிசனத்தைப் பகிர்ந்து, இந்தக் குத்துச் சண்டைப் படத்தைக் காண விருப்பம் என்று எழுதியுள்ளார்.Post Comment

Post Comment