சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு :


Posted by-Kalki Teamசுண்டக்காய் வற்றல் குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் அதை விட மணத்தக்காளி வற்றல் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன்,

புளி - எலுமிச்சைப் பழ அளவு,

வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய் - 50 மில்லி,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

புளியை சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு வறுக்கவும்.

பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும்.

அடுத்து அதில் மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.


Post Comment

Post Comment