தாஜ்மஹால் நகரம் அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!!


Posted by-Kalki Team



ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது.

கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே.

சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்கும்.

அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளில் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது.

இதுமாதிரிதான் ஆக்ரா நகரம் முழுவதுமே காண்பதற்கு இனிமையான அழகானதாக இருக்கும். இது இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகள் முன்பிருந்தே இப்படித்தான் இருக்கிறது. வேண்டுமென்றால் பாருங்கள் இங்கே ஆக்ரா நகரத்தின் மிகப்பழமையான படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1951ம் ஆண்டு ஆக்ராவில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இதுவாகும்

ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டில் எடுக்கப்பட்ட மோடி மசூதியின் படம் இது.. இது ஆக்ராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும்.

19ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட திவான் ஐ காஸ்ஸின் அரிய படம். இது பதேபூர் சிக்ரியில் அமைந்துள்ளது.

1863 - 1866ம் ஆண்டுகளில் தாஜ் மஹாலின் நுழைவுவாயில் இப்படித்தான் இருந்துள்ளது. தற்போது பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் அதைச் சுற்றியுள்ள பூங்காவில் சற்று மாற்றங்கள் உள்ளன.

1890ம் ஆண்டு தாஜ்மஹாலில் எடுக்கப்பட்ட படம்

தாஜ் மஹால், ஆக்ரா

1858ம் ஆண்டில் ஆக்ராவின் தெருக்கள் அழகிய கலைவண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கறுப்புவெள்ளை படமாக இருந்தாலும் எவ்வளவு அழகாக உள்ளது.

துறவியிடம் ஆசி வாங்கும் வழிப்போக்கர்கள்

ஆக்ராவின் முத்து மசூதி படம். 1900ம் ஆண்டில் எடுக்கப்பட்டது.

1890 களிலேயே புழக்கத்தில் உள்ள ஒட்டகவண்டி


Post Comment

Post Comment