அமலாபால் இடத்தை பிடித்த மஞ்சிமா மோகன் :


Posted by-Kalki Teamஅமலாபால் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது அச்சம் என்பது மடமையடா நாயகி மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார்.

கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் குயின். இதன் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வாலும், தெலுங்கு ரீமேக்கில் தமன்னாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மலையாள ரீமேக்கில் மஞ்சிமா மோகன் நடிக்கவிருக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகும் குயின் திரைப்படத்தில் நடிக்க நான்கு வெவ்வேறு கதாநாயகிகளை நடிக்கவைக்கப் படக்குழு முயற்சி செய்தது.

அதன் காரணமாகத்தான் தென்னிந்திய மொழிகளின் முன்னணி நடிகைகளை ஒப்பந்தம் செய்துவருகின்றனர். முன்னதாக மலையாள ரீமேக்கில் அமலாபால் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இந்த வாய்ப்பு மஞ்சிமாவுக்குக் கிடைத்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்திவரும் மஞ்சிமா, குயின் ரீமேக் மூலம் மீண்டும் மலையாள சினிமாவுலகிற்குச் சென்றுள்ளார்.

மலையாளத்தில் `ஸம் ஸம் என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.


Post Comment

Post Comment