குலசேகரன்பட்டினம் தசரா விழா ...


Posted by-Kalki Teamகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி விரதமிருந்து வரும் பக்தர்கள் காளி உள்ளிட்ட வேடமிட்டு காணிக்கை வசூலித்தனர். பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் திருவிழாவில் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, சமயசொற்பொழிவு, திருக்குறள் அவதாரம் கேள்வி பதில் நிகழ்ச்சி, மெல்லிசை விருந்து நடந்தது. இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.


Post Comment

Post Comment