இந்த தலைமுறையில் விஜயசேதுபதிதான்...! கரு.பழனியப்பன்


Posted by-Kalki Teamஇந்த தலைமுறை நடிகர்களில் விஜயசேதுபதி மட்டும்தான் தன்னை வைத்து ஏற்கனவே படம் பண்ணிய டைரக்டர்களை தொடர்ந்து அழைத்து படம் கொடுத்து வருகிறார் என்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்.இதுபற்றி அவர் கூறுகையில், கர்ஜிக்கும் சிங்கமும், பிளிறும் யானையும் எப்போதுமே கூட்டத்தை கூட்டாது. முக்காலியில் உட்காரும் யானையும், தீ வளையத்துக்குள் பாயும் சிங்கமும்தான் கூட்டத்தை கூட்டும்.

ஆனால் அது எல்லா சமயங்களிலும் வெற்றிபெறாது.இயல்புத் தன்மையற்றதைவிட, இயல்புத்தன்மையானதுதான் நீண்டநாள் நீடிக்கும். அந்த மாதிரி சினிமாவும், நடிகர்களும்தான் சினிமாவில் நீடிப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இயல்புத்தன்மை கொண்ட ஒரு நடிகர் விஜய சேதுபதி. மேலும், நம்மை ஒப்பிட்டுப்பார்த்தே சிலர் சாவடிப்பார்கள். அவன் ஒன்னாவது ரேங்க் வாங்கிட்டான் நீ எப்ப வாங்கப்போறே என்பான். அவன் வீடு வாங்கிட்டான் நீ வாங்கலையே, அவன் கல்யாணம் பண்ணிட்டான் நீ பண்ணலையே என மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள். ஆனால், விஜயசேதுபதி ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர். எளிமையான நடிகர். ராக்கெட் கண்டுபிடித்த விஞ்ஞானியால் ஒரு பேனாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த வகையில், எளியதையே வெற்றி கொள்ளும்

விஜயசேதுபதியைத்தான் நான் சிறந்த நடிகராக கருதுகிறேன். அதோடு, இயக்குனர்களை திருப்பி அழைக்கும் நடிகர்கள் இப்போது இல்லை. போன தலைமுறை நடிகர்கள் தங்களது இயக்குனர்களை திரும்பத் திரும்ப அழைத்து படம் பண்ணினார்கள். இந்த தலைமுறையில் விஜயசேதுபதி மட்டும்தான் தன்னை வைத்து படம் பண்ணிய டைரக்டர்கள் எங்கேயும் போய் விடக்கூடாது என்று அவர்களுக்கு தொடர்ந்து படம் கொடுத்து வருகிறார் என்கிறார் கரு.பழனியப்பன்.


Post Comment

Post Comment