நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளிலும் கொடுக்க வேண்டிய தானம் :


Posted by-Kalki Teamஎந்தெந்த பொருட்களை நவராத்திரி நாட்களில் பிறருக்கு தானமாக அளிக்கின்றார்களோ, அந்தப் பொருளுக்காக வாழ்க்கையில் பிறரிடம் என்றுமே மையேந்த மாட்டார்கள்.

நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளுமே பூஜையின் நிறைவாக மங்கலப் பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். இதன் தாத்பர்யம் என்னவென்றால் எந்தெந்த பொருட்களை நவராத்திரி நாட்களில் பிறருக்கு தானமாக அளிக்கின்றார்களோ, அந்தப் பொருளுக்காக வாழ்க்கையில் பிறரிடம் என்றுமே மையேந்த மாட்டார்கள்.

நவராத்திரியை பிரதமை திதியில் ஆரம்பிக்கும்போது வீட்டிற்கு வருபவர்களுக்கு கூந்தல் அலங்காரம் செய்வதற்குத் தேவையான எண்ணெய், ஹேர் பின், ரிப்பன், மலர்கள் போன்ற பொருட்களை ஆடையோடு சேர்த்து தானமாக அளிக்க வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

துவிதயை திதி நாளில் குங்குமம், மஞ்சளை ஆடைகளோடு சேர்த்து தானமாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்தால் அன்னவள் குங்குமத்திற்குப் பங்கம் வராது.

திருதியை திதியில் கண்ணாடி, மஞ்சள், கண் மை மற்றும் ஆடைகளை தானமாகக் கொடுக்க வேண்டும். சதுர்த்தி திதியில் கணவன், மனைவியை வரவழைத்து அவர்கள் இருவருக்கும் மஞ்சள் அல்லது பொன் நிற ஆடைகளுடன் சேர்த்து மஞ்சள், சந்தனம் தானமாகக் கொடுக்க வேண்டும். இதனால் காரியத் தடங்கல்கள், திருமண தோஷங்கள் தீரும்.

பஞ்சமி திதி நாளில் ஏதேனும் ஐந்து மங்கலப் பொருட்களை தானமாக அளிக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம், கண்ணாடி, கண் மை, தாலிச்சரடு, சீப்பு, ரிப்பன் இதுபோன்ற பொருட்களில் ஐந்தோ அல்லது அதற்கு மேற்பட்டோ அவரவர் வசதிக்கேற்ப ஆடைகளுடன் கொடுக்க வேண்டும். இதனால் திருமணத் தடங்கல்களுக்கு முறையான தீர்வினைப் பெறமுடியும்.


Post Comment

Post Comment