புளிப்பான மாங்காய் சட்னி செய்வது எப்படி


Posted by-Kalki Team



இட்லி, தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள மாங்காய் சட்னி சூப்பராக இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மாங்காய் - 1 பெரியது

தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்

மிளகாய் வற்றல் - 8

பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு.

செய்முறை :

மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

மிக்சியில் மாங்காய் துருவல், தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

சத்தான சுவையான மாங்காய் சட்னி ரெடி.


Post Comment

Post Comment