சபரிமலை நடை செப்டம்பர் 16 திறப்பு...


Posted by-Kalki Teamபுரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப்டம்மபர் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. 21 வரை நடை திறந்திருக்கும். 16-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார்.

தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

எல்லா நாட்களிலும் காலை 5.30 முதல் 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை போன்ற பூஜைகளுடன் களபாபிஷேகம், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடைபெறும். 17 முதல் 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு 7.00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


Post Comment

Post Comment