பிரபுதேவாவை இயக்கும் டைரக்டர் விஜய் :


Posted by-Kalki Teamபாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவா, கடந்த ஆண்டு பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்றொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதன்மூலம் சில சமயங்களில், வினோதன் போன்ற படங்களை தயாரித்து வருகிறார். அடுத்தபடியாக ரோமியோஜூலியட் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்.இந்தநிலையில், தற்போது மதராசப்பட்டினம் விஜய் இயக்கும் படத்தில் நாயக னாக நடிக்கிறார் பிரபுதேவா.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. டைரக்டர் ப்ரியதர்ஷனின் உதவியாளரான விஜய், அவருடன் சில இந்தி படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார் என்றபோதும், இதுதான் அவர் இயக்கும் முதல் இந்தி படமாகும். மேலும், ஒரு பாலிவுட் பட நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கும் பிரபுதேவா, பாலிவுட் டெக்னீசியன்களுக்கே இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, தமன்னாவையும் ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். தவிர, இன்னொரு முன்னணி பாலிவுட் நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.


Post Comment

Post Comment