மீண்டும் விக்டருக்கு கைக்கொடுப்பாரா கௌதம் மேனன் :


Posted by-Kalki Teamஎன்னை அறிந்தால் படத்தில் விக்டராக நடித்த அருண் விஜய்யை வைத்து கௌதம் மேனன் மீண்டும் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் அருண் விஜய். இதில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார். விக்டர் என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இப்படம் அருண்விஜய்க்கு ரீஎன்ட்ரியாக அமைந்தது.

இப்படத்திற்குப் பிறகு வெளியான அருண் விஜய்யின் குற்றம் 23 படமும் சூப்பர் ஹிட்டானது. இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் அடுத்ததாக நடிக்க இருப்பது 25வது படமாகும். ஆகவே கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கௌதம் மேனனும், அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்குவேன் என்றும் கூறியிருந்தார். இதனால், இந்த கூட்டணி உருவாகும் என்று நம்பப்படுகிறது.


Post Comment

Post Comment