சர்வதேசக் கல்வியறிவு தினம் - செப்டம்பர் 8


Posted by-Kalki Team1965ஆம் ஆண்டு இந்த தினம் சர்வதேசக் கல்வியறிவு தினமாக அறிவிக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது. தனி மனிதர்கள், குழுக்கள் மற்றும் சமுதாயங்கள் ஆகிய எல்லாத் தரப்புக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும். யுனெஸ்கோவின் ஆய்வுப்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில்தான் வயது வந்தோர் கல்வியறிவு மிகவும் குறைவாக இருக்கிறது (58.6%). கல்வியறிவு குறைந்த பகுதிகளில் ஏழ்மை நிலவுவதையும், பெண்களுக்கு எதிரான பாலின வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதையும் இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலகெங்கும் முதியோர் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதற்காகப் பல்வேறு கருத்தரங்கங்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.


Post Comment

Post Comment