உங்க வீட்டு பிள்ளையும் படிப்பில் டாப் ஆக வரணும்னா உடனே இந்த கோயிலுக்குப் போங்க ;


Posted by-Kalki Teamகல்விதான் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. என்னதான் பெரிய சொத்து இருந்தாலும் படிக்கலனா முதுகுக்குப்பின்னாடி தற்குறினு பேசுவாங்கனு ஊர் பக்கம் ஒரு பேச்சு இருக்கும். அதே மாதிரிதான் என்னதான் ஏழையா இருந்தாலும் படிச்சா போதும் அவன் வாழ்க்கையே மாறிடும்.

பிள்ளைங்களுக்கு படிப்பில் கவனம் குறைய நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனா அவங்கள கட்டுப்படுத்தி வைக்குறதுனால மட்டும் கல்வியில் கவனம்

செலுத்திடுவாங்களா என்ன?

கல்வியில் முன்னேற்றம் பெற நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் செல்லவேண்டிய கோயில் இதுதான். தமிழ்நாட்டிலேயே இந்த ஒரே ஒரு கோயில்தான் கல்விக்கான கோயில் ஆகும்.

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ளது இந்த கோயில். பூந்தோட்டம் அருள்மிகு சரஸ்வதியம்மன் கோயில் தமிழகத்திலேயே அமைந்துள்ள ஒரே கோயில்.

500 முதல் 1000 வருடங்களுக்கு முன்னரே கட்டப்பட்ட கோயில் இதுவாகும். இது சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.

இந்த கோயிலின் சிறப்பு இந்த கோயில் இஸ்லாமியர்கள் அதிகம் பேர் வாழும் ஊரில் அமைந்துள்ளதுதான்.

தமிழ் கவிஞரானஒட்டக்கூத்தர் பிறப்பிடமாக கூத்தனூர் உள்ளது. சோழ மன்னன் ராஜராஜ சோழன் இந்த கிராமத்தை ஒட்டக்கூத்தரின் கவிதைகளுக்குப் பாிசாக வழங்கினாா். ஏனெனில் அவர் ஒரு பெரிய கவிஞராவார்.

எனவே இந்த கிராமம் கூத்தன் + ஓர் =கூத்தனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கூத்தாநூர் முக்கியமான சுற்றுலா தலமாக மாறியது. விஜயதசமி திருவிழா கூதனூரில் கொண்டாடப்படுகிறது, இது இக்கோவிலில் நடை பெறும் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும்.

கும்பகோணம் சாரங்கபாணி தீட்சிதர் என்பவரின் புதல்வன் வாய் பேசாதிருந்து கூத்தனூர் அம்பிகை அருளால் விஜயதசமி நன்னாளில் பேச்சுத்திறன் பெற்றதும் இத்தலத்தை திருப்பணி செய்து புருஷேத்தம்பாரதி எனப் போற்றப்பட்டதும் அண்மை கால வரலாறுகள் கூறுகின்றன. இத்தலத்தில் அருள்பாலித்து வரும் அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுவோர்க்கு கல்வி அறிவு பெற்று மேன்மை அடைவர்.

கூத்தனூர் சரஸ்வதி ஆலய தல புராணம் சகோதர சகோதரி மணம் புரிவதற்கான பண்பாட்டுத் தடையினைப் பேசுகிறது. சத்திய லோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது

காலை 7.30 மணி முதல் 1.00 மதியம் மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜைவிவரம் திருவிழாக்கள் :

ஒரு கால பூஜை.

நவராத்திரியில் சரஸ்வதி பூஜை-விஜயதசமி முக்கிய திருவிழாவாகும்.

அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.

நவராத்திரி 10 நாட்களும் காலை, மாலை என 2 வேளைகளிலும் விநாயகரின் வீதி உலா நடைபெறும். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி 12 நாட்களுக்குப்பின் ஊஞ்சல் உற்சவம் கொண்டாடப்படுகிறது.


Post Comment

Post Comment