2017 செப்டம்பர் 12 : அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகம்.!


Posted by-Kalki Team



இந்தியாவில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 8 அறிமுகம் செய்யப்படுகிறது, மேலும் அறிமுகம் செய்தபின்பு ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டெல்லியில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் டூயல் கேமரா மற்றும் டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது, டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொதுவாக 6.3-இன்ச் க்யுஎச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 18.5: 9 விகிதம் இடம்பெற்றுள்ளது இதன் டிஸ்பிளே வடிவமைப்பு.

இக்கருவி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. அதன்பின் டெலிஃபோட்டோ லென்ஸ் OIS, f / 2.4 துளை, 10x டிஜிட்டல் ஜூம் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 2ஒ ஆப்டிகல் ஜூம் மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கைரேகை சென்சார், வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற

இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 பொறுத்தவரை 3330எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்

இவற்றின் விலைப் பொறுத்தவரை ரூ.74,900 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post Comment

Post Comment