ஹன்சிகா இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா :


Posted by-Kalki Teamஹன்சிகா நடித்த கதாபாத்திரத்தில், தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியிருகிறார்.

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் உருவான படம் போகன். லட்சுமணன் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தை தெலுங்கில் ரீமெக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழில் இப்படத்தை இயக்கிய லட்சுமணனே தெலுங்கில் இயக்க இருக்கிறார். இதில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்க இருப்பதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹன்சிகா கதாபாத்திரத்திற்கு கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மேலும் அரவிந்த் சாமி நடித்த கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக இருக்கிறது.Post Comment

Post Comment