தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம் :


Posted by-Kalki Teamசாதாரண கவசத்தை விடவும் பஞ்சலோக கவசமானது, உடல், உள்ளம் மற்றும் உயிர் ஆகிய மூன்று விதங்களிலும் பாதுகாப்பை தரக்கூடியது.

ஐம்பொன், பஞ்சலோகம், பஞ்சதாது என்ற பெயர்கள் குறிப்பிடும் பொருட்களின் உள்ளர்த்தம் நமக்கு எளிதாக புரியக்கூடியதுதான். பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய உலோகங்களின் சேர்க்கையாக அது இருக்கிறது.

நமது உடல் மற்றும் ஆன்மிக ரீதியான நல்ல மாற்றங்களுக்கும், அந்த உலோகங்களின் கூட்டுச்சேர்க்கை நம்மால் பல விதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சதாது என்று சொல்லப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கவசத்தை ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு தந்ததாக மகாபாரத செய்தி உண்டு. சாதாரண கவசத்தை விடவும் பஞ்சலோக கவசமானது, உடல், உள்ளம் மற்றும் உயிர் ஆகிய மூன்று விதங்களிலும் பாதுகாப்பை தரக்கூடிய வகையில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு தரப்பட்டது.


Post Comment

Post Comment