கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் :


Posted by-Kalki Teamசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் விலை சார்ந்த தகவல்களை பார்ப்போம்.

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இந்நிலையில், மற்றும் ஓர் ஸ்மார்ட்போனினை சாம்சங் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஜெ7 பிளஸ் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல் பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன் 13 எம்பி, f/1.7 அப்ரேச்சர், 5 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர் கொண்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

டூயல் கேமரா மட்டுமின்றி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளே, பிக்ஸ்பி ஹோம், கைரேகை ஸ்கேனர் போன்ற வசதிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. பிளாக், ஷேம்பெயின் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 5.5 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் AMOLED ஸ்கிரீன்

- 2.39 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு நௌக்கட்

- 13 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா

- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்

- 3000 எம்ஏஎச் பேட்டரி

- 4ஜி எல்டிஇ, ப்ளூடூத்

- கைரேகை ஸ்கேனர்

- டூயல் சிம் ஸ்லாட்

முதற்கட்டமாக தாய்லாந்தில் மட்டும் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன் 389 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,829 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி ஜெ7 பிளஸ் அதன் பின் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் கேலக்ஸி ஜெ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.


Post Comment

Post Comment