விவேகம் பட ஷூட்டிங்க் நம்ம ஊர்லயா? அப்ப பல்கேரியா?


Posted by-Kalki Teamகங்கோத்ரி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல் மட்டத்திலிருந்து 3750 மீ உயரத்தில், பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஆதி சங்கரரால் ஏற்படுத்தபட்ட சார் தாம், மற்றும் டோ தாம் ஆகிய புனித யாத்திரைகளில், கங்கோத்ரி முக்கிய இடம் பெறுகிறது.

அஜித் குமார் நடித்து வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விவேகம் படத்தின் காட்சிகள் பல ஐரோப்பாவிலும், சில இந்தியாவிலும் படமாக்கப்பட்டுள்ளன. நாம் பல்கேரியாவில் நடந்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் படத்தில் வரும் காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டவை. மேலும், இந்த படத்தில் வரும் பல காட்சிகள் எடுக்கப்பட்ட இடங்களைப் போலவே இந்தியாவிலும் பல இடங்கள் இருக்கின்றன. நீங்கள் நம்பமாட்டீர்கள் அப்படியே இருக்கிறது வாருங்கள் காணலாம்.

கங்கை அல்லது பாகீரதியின் உற்பத்தி ஸ்தானமாகிய காமுக், கங்கோத்ரியில் இருந்து 19 கி.மீ. தொலவில் உள்ளது. இவ்விடத்தில் கங்கை, பாகீரதி என அழைக்கப்படுகிறாள்.

பாகீரதி ஆற்றின் மேலே உள்ள அதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், அடர்ந்த காடுகள் இருக்கின்றன. இப்பகுதியில் பனி மலைகள், பனியாறுகள், உயரமான முகடுகள், ஆழமான, மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகள், மற்றும், செங்குத்தான பாறைகள் உள்ளன.

கங்கோத்ரி, கடல் மட்டத்திலிருந்து 1800மீ முதல் 7083 மீ உயரத்தில் உள்ளது. இந்த காடு, இந்தியா-சீனா எல்லை வரை பரவியுள்ளது. இது கங்கோத்ரி தேசிய பூங்கா என அழைக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகள் இங்கு, ஆல்ப்ஸ் ஊசியிலை காடுகள், ஆல்ப்ஸ் புதர்கள், மற்றும் பச்சை புல்வெளிகளை பார்க்க முடியும். அந்த வகையில் அவர்களுக்கு நல்ல விருந்துதான்.

இந்து மத நம்பிக்கைகளில், கங்கோத்ரி ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. இங்கே பழமையான இந்து மத கோவில்கள் ஏராளமாக உள்ளன.

கங்கோத்ரி கோவில், இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான யாத்திரை மையமாகும். இந்த கோயில், கூர்க்கா அரசர் `அமர் சிங் தாபா வால், 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கங்கா தேவியை வழிபாட ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

இங்கே ஞானேஸ்வர், மற்றும் ஏகதேச ருத்ரர் கோயில் ஆகியன உள்ளன. ஏகதேச ருத்ரர் கோயிலில் கொண்டாடப்படும், `ஏகதேச ருத்ர அபிஷேக பூஜை மிகவும் பிரபலமானது.

கங்கோத்ரியில், `பாகீரதியின் சிற்பம், மற்றும் நீரில் மூழ்கிய `சிவலிங்கம் ஆகியவற்றை பயணிகள் காணலாம். இவ்விரண்டும் பல்வேறு மத சடங்குகள் மற்றும் விழாக்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த சிவலிங்கம் இயற்கையாக உருவான சுயம்பு லிங்கமாகும். இதை குளிர் காலங்களில், தண்ணீர் மட்டம் குறையும்போது மட்டுமே தரிசிக்க முடியும். `பாகீரதியின் சிற்பம், என்பது ஒரு சிறிய கல் துண்டு.

இதன் மீது அமர்ந்துதான் பாகிரத மஹராஜா தியானம் செய்தார் என நம்பப்படுகிறது. சுற்றுலா பயணிகள், கங்கோத்ரி கோவிலின் அருகே அமைந்துள்ள, `கவுரி புஷ்கரினி, மற்றும் `சூர்யா புஷ்கரினி ஆகியவற்றில் புனித நீராடலாம்.


Post Comment

Post Comment