ஏழுமலையானின் ரகசியங்கள்!!!


Posted by-Kalki Teamஇந்தியாவிலுள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும்.

இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும்.

இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.

உலகிலேயே பழமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான் என குறிப்பிடப்படுகின்றது.

அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.

எந்த தெய்வத்தின் சிலையிலும் கையில் ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவ சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் சங்க இலக்கியங்களில் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளிபட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது.

ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது என அக்கோயில் அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.

பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது.

ஏழுமலையானின் அபிஷேகத்திற்காக பற்பல நாடுகளிலிருந்தும் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றது.

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள், பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள், ஐரோப்பாவில் ரோஜாப்பூக்கள் என்பன இறக்குமதி செய்யப்பட்டு பெருமாளுக்கு சாத்தப்படுகிறது.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே மீண்டும் கலக்கிறது, இதனால் பக்தர்கள் அப்புனித தீர்த்தத்தில் நீராடுவார்கள்.


Post Comment

Post Comment