பதினாறு சம்பத்துக்களையும் அள்ளித்தரும் கோ பூஜை :


Posted by-Kalki Teamநமது இந்து மதத்தில் கோமதாவாகிய பசுவை வணங்குவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

பசுவின் உடல் முழுவதும் தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேவர்கள் வசிக்கின்றனர். அதனால் தான் பசுவை வலம் வந்து வணங்கினால் முப்பது முக்கோடி தேவர்களை வணங்கின புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள்.

பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும்.

கோ பூஜை செய்யும் போதும், பசுவின் முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும். அதிகாலையில் பசுஞ்சாணத்தை கொண்டு வீட்டு வாசலை மெழுகி ,கோலம் இட்டால் , மகாலட்சுமி நம் வீடு தேடி வருவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன என்று புராணங்கள் கூறுகிறது. பசுவின் கோமயம் எனப்படுகின்ற சாணம்,கோமியம் எனப்படுகிற மூத்திரம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு செய்யப்படுகிற பஞ்சகவ்ய அபிஷேகம் மிகவும் விசேஷமானது. திருமகள் வாசம் செய்யும் இதன் பின்பாகத்தை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

கோமாதாவின் உடற் பகுதியில் உறையும் தெய்வங்களைப் பற்றியும், தேவகணங்களைப் பற்றியும் நமக்கு தெரிந்த சில ,தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.

கோமாதாவின் முகம் மத்தியில் -சிவன்

வலக் கண் - சூரியன்

இடக் கண் - சந்திரன்

மூக்கு வலப்புறம் - ஆறுமுகக் கடவுள் முருகன்

மூக்கு இடப்புறம் - முழு முதற்கடவுள் விநாயகர்

காதுகள் - அஸ்வினி குமாரர்

கழுத்து மேல்புறம் - ராகு

கழுத்து கீழ்புறம் -கேது

கொண்டைப்பகுதி -நான்முகன் பிரம்மா

முன்கால்கள் மேல்புறம் - கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்

முன்வலக்கால் - பைரவர்

முன் இடக்கால் - சல்லின் செல்வர் ஹனுமார்

பின்னங்கால்கள் - பராசரர், விஷ்வாமித்திரர்

பின்னகால் மேல்பகுதி - நாரதர், வசிஷ்டர்

பிட்டம் கீழ்ப்புறம் - கங்கை

பிட்டம் மேல்புறம் - திருமகளான லக்ஷ்மி

முதுகுப்புறம் - பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி

வயிற்றுப்பகுதி - ஜனககுமாரர்கள் பூமாதேவி

வால் மேல் பகுதி - நாகராஜர்

வால் கீழ்ப்பகுதி - ஸ்ரீமானார்

வலக்கொம்பு - வீமன்

இடக்கொம்பு - இந்திரன்

முன்வலக்குளம்பு - விந்தியமலை

முன்இடக்குளம்பு - இமயமலை

பின் வலக்குளம்பு - மந்திரமலை

பின் இடக்குளம்பு -த்ரோணமலை

பால்மடி - அமுதக்கடல்

முப்பத்துமுக்கோடிதேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் ஆட்சி செய்யும் பசுவை காலையில் எழுந்ததும் தொழுவத்தில் காண்பது சுபசகுனமாக கருதப்படுகிறது.

கோபூஜையை செய்வதால் சகல சம்பத்துக்களும், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பதால் கோமாதாவை வணங்கி பதினாறு செல்வத்தைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.


Post Comment

Post Comment