புதிய வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும் சோனி எக்ஸ்பீரியா :


Posted by-Kalki Teamசோனி நிறுவனம் இந்தியாவில் சிறந்த தரமான பொருட்களை விற்பனை செய்துவருகிறது. மேலும் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள சோனி எக்ஸ்பீரியா எகஸ்இசெட்1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. சோனி நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி நீலம் மற்றும் கருப்பு போன்ற வண்ண மாறுபாடுகளில் இந்த சோனி எக்ஸ்பீரியா எகஸ்இசெட்1 ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக டூயல் சிம் ஆதரவு கொண்டுள்ளது, அதன்பின் டூயல் கேமரா மற்றும் பல்வேறு மென்பொருள் சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

சோனி எக்ஸ்பீரியா எகஸ்இசெட்1 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதுஇ அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்

தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஜிபிஎஸ், வைபை , ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சோனி எக்ஸ்பீரியா எகஸ்இசெட்1 பொறுத்தவரை 2700எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.


Post Comment

Post Comment