நடிகை ஓவியாவின் மார்க்கெட் சூடு பிடித்தது :


Posted by-Kalki Teamபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியாவின் மார்க்கெட் தற்போது சூடு பிடித்திருக்கிறது.

களவாணி படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. அதன்பிறகு சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.

ஓவியா நடிப்பில் தயாரான சீனி என்ற படம் இப்போது ஓவியாவை விட்டா யாரு என்று பெயர் மாறி இருக்கிறது. ஓவியா பெயரை தலைப்பில் போட்டால் படம் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்ற அளவு சினிமாவில் இவருக்கு முக்கிய இடம் கிடைத்திருக்கிறது.

தமிழில் பல புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஓவியாவை தேடி வந்திருக்கிறது. தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களில் நடித்திருக்கும் ஓவியாவை இயக்குனர் ஆனந்த்‌ஷங்கர் தனது புதிய படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார். அடுத்து யாமிருக்க பயமேன் படத்தின் 2-ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார். இதில் கிருஷ்ணாவின் ஜோடி ஆகிறார்.

இதை தவிர ஓவியா நடித்துள்ள மலையாள படங்களையும், தமிழில் டப் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதல் முறையாக ஓவியா நடிப்பில் 6 வருடங்களுக்கு முன்பு வெளியான மனுஷ்ய மிருகம் என்ற மலையாள படம் தமிழில் போலீஸ் ராஜ்யம் என்ற பெயரில் வர இருக்கிறது. இதில் பிரித்விராஜ், கிரண், ஓவியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாபுராஜ் இயக்கி இருக்கிறார். தமிழ் வசனம், பாடல்களை புலவர் சிதம்பரநாதன் எழுதுகிறார்.


Post Comment

Post Comment