வெஜ் - மேத்தி கோதுமை ரவை உப்புமா :


Posted by-Kalki Teamதினமும் கோதுமையால் ஆன உணவை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று காய்கறிகள், வெந்தயக்கீரை, கோதுமை ரவை வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - ஒரு கப்,

வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் கலவை - ஒரு கப்,

பச்சை மிளகாய் - 2,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

கடுகு - அரை டீஸ்பூன்,

கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

வெந்தயக்கீரை - ஒரு கட்டு.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் ஆய்ந்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தகீரை, காய்கறிகள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் சற்று வதங்கியதும் மூன்று கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த ரவையை சேர்த்து கிளறி வேக விடவும்.

நன்றாக வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான வெஜ் - மேத்தி கோதுமை ரவை உப்புமா ரெடி.


Post Comment

Post Comment