விவேகம் படத்தின் கதை என்னுடையது: இளம் இயக்குநர் குற்றச்சாட்டு :


Posted by-Kalki Team`விவேகம் படத்தின் கதை தன்னுடையது என இளம் இயக்குநர் ஒருவர் பேஸ்புக்கில் குற்றம்சாட்டி அவரது ஆதங்கத்தை பதிவிட்டிருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் படம் விவேகம்.

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் விவேகம் படத்தின் கதையில் 60 சதவீத கதை தன்னுடையது என்று இளம் இயக்குநரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

``துரோகம். தன்னுடைய `ஐ-நா படத்தின் கதையை விவேகம். கடந்த 2013-ஆம் ஆண்டு தனது கதையை அஜித்தின் நெருங்கிய உதவியாளர் ஒருவரிடம் சொல்லி, அஜித்திடம் கதை சொல்ல நேரம் ஒதுக்கும்படி கேட்டிருந்தேன். மூன்று வாரங்களுக்கு பிறகு எனக்கு வந்த பதிலில், அஜித் புதுமுக இயக்குநருடன் பணிபுரிவதில்லை என்பதால் அவரிடம் தன்னால் கதை சொல்ல முடியவில்லை.

இந்நிலையில், விவேகம் படத்தின் 60 சதவீத கதை மற்றும் நான் சொல்லிய திரைக்கதை படத்தில் இடம்பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதேநேரத்தில் இந்த கதை திருட்டில் அஜித் சாருக்கோ, இயக்குநர் சிவாவுக்கோ தொடர்பு இருக்கும் என்று நான் கூறவில்லை. இதற்கு முழு காரணமும் நான் கதை கூறிய அஜித்தின் நெருங்கிய உதவியாளர் தான் இதற்கு முழு காரணமும். விவேகம் படத்தை பார்க்க வைத்து தன்னை அழ வைத்தது அந்த உதவியாளர் தான்.

இந்த கதையை ஐ-நா என்ற பெயரில் படமாக எடுக்க நினைத்திருந்தேன். நான் பணத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ தான் இதைகூறவில்லை. தனது கதையை அவர்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டாலே போதும்

இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.Post Comment

Post Comment