மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசித்த லீலை அலங்காரம் :


Posted by-Kalki Teamமுதலாம் நாளான நேற்று “கருங்குருவிக்கு உபதேசித்த லீலை“ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் இடம்பெறுகின்றன.

முதலாம் நாளான நேற்று “கருங்குருவிக்கு உபதேசித்த லீலை“ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

கருங்குருவிக்கு உபதேசித்த லீலை வருமாறு:-

“முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்தாலும் சிறிது பாவமும் செய்தமையால் ஒருவன் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்தது.

அச்சமயம் அம்மரத்தின் கீழே ஒருசிலர் மதுரையைப் பற்றியும் பொற்றாமரைக்குளத்திலே நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்றும் உரையாடினர்.

இதைக்கேட்ட கருங்குருவி அங்கிருந்து நேராக மதுரைக்கு பறந்து வந்தது. பொற்றாமரைக் குளத்திலே நீராடி இறைவனை வணங்கியது.

இறைவனும் அக்குருவியின் பக்தியை மெச்சி, மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார்.

மேலும் கருங்குருவி இனத்தின் எளியான் என்னும் பெயரை மாற்றி, வலியான் என வழங்கும்படி செய்தார்.

இன்றைய அலங்காரம்

இன்று (சனிக்கிழமை) நாரைக்கு முக்தி அளித்த லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி தருகிறார்.


Post Comment

Post Comment