சூப்பரான சைடிஷ் பேபிகார்ன் மஞ்சூரியன் :


Posted by-Kalki Teamபுலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் இந்த பேபிகார்ன் மஞ்சூரியன். இந்த மஞ்சூரியனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பேபிகார்ன் - 1 பாக்கெட்,

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,

வெங்காயம் - 1,

கடலை மாவு - கால் கப்,

சோள மாவு - கால் கப்,

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

சோயா சாஸ் - 2 டீஸ்பூன்,

தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,

சோள மாவு (கரைத்து ஊற்ற) - 1 டீஸ்பூன்,

வெங்காயத்தாள் - அலங்கரிக்க,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

பேபிகார்னை நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு டீஸ்பூன் சோள மாவை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்த மாவில் பேபிகார்னை முக்கியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும் என்றில்லை.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.

இத்துடன் பொரித்த பேபி கார்னை சேர்த்து கலந்து அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கிளறி இறக்கவும்.

கடைசியாக மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.


Post Comment

Post Comment