ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் FI BS-IV ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்தது ;


Posted by-Kalki Teamராயல் என்ஃபீல்டு நிறவனத்தின் புதிய ஹிமாலயன் FI BS-IV மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கும் ஹிமாலயன் FI BS-IV மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. வெளியீட்டிற்கு முன் புதிய ஹிமாலயன் FI BS-IV மாடல் கேரளாசோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திடம் கேட்டபோது, மும்பை மற்றும் டெல்லியில் ஹிமாலயன் FI BS-IV முன்பதிவுகள்ள் துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.5,500 மட்டும் செலுத்தி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் FI BS-IV மாடலை முன்பதிவு செய்து, அக்டோபர் 2017 முதல் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BS-IV ரக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் FI ரூ.1,65,331 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் ரூ.1,70,190 (எக்ஸ்-ஷோரூம், மும்பை)என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்வோருக்கு இரண்டு மாதங்கள் காத்திருந்த பின்னரே விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பை படங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஹிமாலயன் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 411சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேட் பிளாக் நிறத்தில் காணப்படும் புதிய ஹிமாலயன் BS-IV மாடல் வெளியீடு தாமதமாகலாம் என கூறப்பட்டது.

இந்த இன்ஜின் 24.5bhp, 32Nm பீக் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய இன்ஜினில் அதிர்வுகளை குறைவாக்க இரண்டாவது பேலன்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டுள்ளது. இரு சக்கரங்கள் முன்பக்கம் 300 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹிமாலயன் 21 இன்ச் முன்பக்க வீல்களும், பின்புறம் 17 இன்ச் வீல்களை கொண்டுள்ளது. இத்துடன் 220 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 800 மில்லிமீட்டரில் சீட் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் காப்பீட்டை சேர்த்து மும்பையில் ஹிமாலயன் FI BS-IV விலை மும்பையில் ரூ.2,00,649 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு வருட காப்பீட்டுடன் சேர்த்து ஹிமாலயன் FI BS-IV விலை ரூ.1,84,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Post Comment

Post Comment