சுதந்திர தினம்: இந்திய தேசியகொடி, அமீர்கான் உருவத்துடன் தங்க கேக்


Posted by-Kalki Teamஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, துபாயில் ரூ.26 லட்சம் செலவில் இந்திய தேசியகொடி, அமீர்கான் உருவத்துடன் தயாரிக்கப்பட்ட தங்க கேக் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு துபாயில் இயங்கி வரும் இந்திய தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று இந்திய தேசியகொடி மற்றும் நடிகர் அமீர்கான் உருவத்துடன் தங்க கேக் ஒன்றை தயாரித்துள்ளது. சாதாரண மாவில் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கின் வெளிப்புறம் முழுவதும் தங்கத்துகள்களால் பூசப்பட்டு உள்ளது.

இந்த கேக்கில், தங்கல் இந்தி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியான மல்யுத்த போட்டியில் பயிற்சி பெறும் சிறுமிகள், மற்றும் புல், கொட்டகை, மணல் தளம், தங்க பதக்கங்கள் மற்றும் நடிகர் அமீர்கான் உருவம் ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.

4 வாரம் உழைப்பில் உருவான இந்த கேக் 4 அடி உயரத்தில், 54 கிலோ எடையில் உள்ளது. அமீர்கான் உருவம் மட்டும் 30 கிலோவில் செய்யப்பட்டுள்ளது. சாக்லெட் ஸ்பான்ஞ்ச், கனாச், பெல்கியன் சாக்லெட், சர்க்கரை, மாவுப்பொருட்கள் மற்றும் தங்க துகள்கள் போன்றவை கேக் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கேக்கை தயாரிக்க மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 லட்சம்) செலவிடப்பட்டுள்ளது. இதனை 240 பேர் பகிர்ந்து சாப்பிடலாம். இந்திய சுதந்திர தினத்திற்காக இதை அர்ப்பணித்துள்ளதாக அந்த கேக்கை தயாரித்த பேக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Post Comment

Post Comment